Rohit Sharma: Cricket News & Match Updates
ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை படைத்த ரோஹித் சர்மா, விராட் கோலி!
ஆஸ்திரேலியா- இந்தியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக மேத்யூ ரென்ஷா 56 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 41 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா சதம் விளாசியதுடன் 121 ரன்களையும், விராட் கோலி 74 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இருப்பினும் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. Read More...