இந்தியா vs தென் ஆப்பிரிக்கா மூன்ராவது டி20 போட்டியின் பிட்ச் ரிப்போர்ட்!

Updated: Tue, Jun 14 2022 14:42 IST
Image Source: Google

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா அணி திணறி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி படுமோசமாக தோற்ற நிலையில் இன்று வாழ்வா சாவா என்ற கட்டத்தில் 3வது போட்டி நடைபெறுகிறது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணிக்கு கடந்த 2 போட்டிகளிலும் பவுலிங் தான் பெரும் பின்னடைவாக இருந்தது. புவனேஷ்வர் குமாரை தவிர வேறு யாரும் பெரிதாக சோபிக்கவில்லை . எனவே இன்று அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் தான் தப்பிக்க முடியும்.

இந்நிலையில் இன்று அவர்களுக்கு முக்கிய சவால் காத்துள்ளது. போட்டி நடைபெறும் விசாகப்பட்டினம் டாக்டர்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் கடந்த 2 வருடங்களாக ஒரு போட்டி கூட நடைபெறவில்லை. 2016ஆம் ஆண்டில், இந்தியாவை எதிர்த்து ஆடிய இலங்கை அணி 82 ரன்களுக்கு மோசமாக சுருண்டது. இதன் பின்னர் 2019இல் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 126 என்ற மோசமான ஸ்கோரை பதவி செய்திருந்தது. இதன்மூலம், இன்றைய போட்டியிலும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்காது எனத்தெரிகிறது.

இந்த களத்தில் லெக் ஸ்பின்னர் அக்சர் படேலுக்கு பதிலாக ஆஃப் ஸ்பின்னர் தீபக் ஹூடாவையும், ஆவேஷ் கானுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கையும் சேர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TAGS

Related Cricket News ::

Most Viewed Articles